மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!!
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என கோரி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க உயர் நீதிமன்றத்தில் இன்று (17) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதன் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மத்திய வங்கி திருத்த மசோதாவில்” உள்ள சில விதிகள், அந்த வங்கியின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக மத்திய வங்கியின் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதிக்கப்படுவதுடன், பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய வங்கி விடுவிக்கப்படும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.