;
Athirady Tamil News

மோசமான பணவீக்க காலம் முடிந்து விட்டது: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்!!

0

கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது. நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.

எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது. அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும். அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.