;
Athirady Tamil News

மத்தியில் காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி: அகிலேஷ், மம்தா பானர்ஜி முடிவு!!

0

மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என தலைவர்கள் குரல் கொடுத்தாலும், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க முக்கிய கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

அப்போது இந்த கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி அடுத்த வாரம் ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளார். எனவே, இவர்கள் மூவரும் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் மற்ற மாநில கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சமமான தூரத்தில் வைக்க வேண்டும் என்றே இந்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.