மக்கள் வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிக்கை !!
மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் சிறந்த நலன்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் வங்கி எப்போதும் அரச நிறுவனத்திற்கு நம்பகமான பங்காளியாக இருந்து வருகிறது என்பதை நாங்கள் வலுவாக வலியுறுத்த விரும்புகிறோம் என்று மக்கள் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தவறான செய்திகளை தெளிவுபடுத்தும் வகையில் மக்கள் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அனைத்து பொது மற்றும் தனியார் துறை வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்கள் வங்கி நன்கு வசதிகளைக் கொண்டுள்ளது.
இதேவேளை அரச வங்கிகளில் மாத்திரம் பேணப்பட்டு வந்த அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை தனியார் வங்கிகளில் ஆரம்பிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே மக்கள் வங்கியின் அறிக்கை வெளியாகியுள்ளது.