முறை தவறிய காதல்: இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை செய்த உறவினர்!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் துரைக்கண்ணு (வயது 35) என்பவர் காதலித்துள்ளார். ஆனால் முறைதவறிய காதல் என்பவதால் அவரை திருமணம் செய்ய பவித்ரா விரும்பவில்லை. துரைக்கண்ணுவுக்கு பவித்ரா மகள் முறை வேண்டும்.
அத்துடன் துரைக்கண்ணுவைவிட பவித்ராவுக்கு 15 வயது குறைவு. தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு. இந்நிலையில் இன்று பவித்ராவின் வீட்டுக்கு சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், வீட்டுக்கு சென்று தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.