பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம்: இந்திய துணை தூதர் பேச்சு!!
பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை என்று அந்நாட்டிற்கான இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் வர்த்தக மற்றும் தொழில்துறை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா எப்போதும் பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகின்றது.
ஏனென்றால் நமது புவியியல் அமைப்பை நம்மால் மாற்ற முடியாது. பாகிஸ்தானுடன் இயல்பான உறவை நோக்கி செல்வதற்கே இந்தியா விரும்புகின்றது. இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியபோதும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை. உறவுகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய முதன்மையான நடவடிக்கை வர்த்தக உறவுகளை சீராக்குவதே ஆகும்.இவ்வாறு குறிப்பிட்டார்.