கலாசாலை நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டி!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் அண்மையில் (16.03.2023 வியாழன் பிற்பகல் 2 மணிக்கு) கலாசாலை மைதானத்தில் நடைபெற்றன.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும் கலாசாலையின் முன்னாள் அதிபரும் பிரான்ஸ் அரசினால் செவாலியே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமாகிய சிவயோகநாயகி இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.