;
Athirady Tamil News

படுக்கையில் இறந்து கிடந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான தகவல்!!

0

பூநகரி. 4ஆம் கட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாலச்சந்திரன் இசைமாறன் என்றழைக்கப்படும் தம்பன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் அன்றிரவு வழமை போன்று தூங்குவதற்காக சென்றுள்ளார். விடிந்து வெகு நேரமாகியும் எழாத காரணத்தினால் தாயார், இளைஞனை எழுப்பியுள்ளார். இளைஞன் வாயில் நுரை தள்ளிபடி மூச்சின்றி அசைவற்று கிடந்துள்ளார்.

அதனையடுத்து இளைஞனை உறவினர்களின் உதவியுடன் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்றனர். ஆனால் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவில்லை.

பின்பு இளைஞனின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது பாம்பு தீண்டியதால் ஏற்பட்ட விசம் உடலினுள் பரவி தான் அவருக்கு மரணம் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.