உஜ்ஜைனில் வாய்க்கால் பாலத்தின் கீழ் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்து- 25 பேர் படுகாயம்!!
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் குஜராத் நோக்கிச் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்நது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 25 பேர் காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் குமார் புர்ஷோத்தம் கூறுகையில்,” உஜ்ஜையினிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தூரில் இருந்து ராஜ்கோட் நோக்கிச் சென்ற பேருந்து, பூகி மாதா பைபாஸில் உள்ள 8 அடி ஆழ வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஏறக்குறைய 25 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் இருவரில் நிலை மோசமாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 பயணிகளுடன் பேருந்தை வேகமாக இயக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.