டெல்லி: பிளாஸ்டிக் பையில் கிடந்த பெண்ணின் தலை, உடல் பாகங்கள்!!
தென்கிழக்கு டெல்லியின் சராய் காலேகான் பகுதியில் மெட்ரோ கட்டுமான தளம் அருகே வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது பிளாஸ்டிக் பையில் பெண்ணின் தலை மற்ற உடல் பாகங்கள் இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணின் தலை, உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.