இலங்கை மீனவர்கள் ஆறுபேர் இந்திய கடற்படையால் கைது.!!
இந்தியாவின் தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் ஆறு இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை சற்று முன்னர் கைது செய்துள்ளது.
இலங்கை மீனவர்களிற்கு சொந்தமான ஒரு படகில் 6 மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படையின் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றது.