பலருக்கும் மது கசந்தது !!
இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ரூபாவினால் குறைந்துள்ளது என கலால் திணைக்கள அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் கலால் வரி வருமானம் 2,860 கோடி ரூபாயாகும். எனினும், 2023 ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 2,510 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் கலால் வருமான வரி ஆதாயம் இவ்விரண்டு மாதங்களிலும் 12.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.