’மனோ, திகாவிடம் கேளுங்கள் ஜீவன் ’ !!
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு பஸ்களை எந்த முறையில் வழங்குகிறார் என்பது குறித்து திகாம்பரம் மற்றும் மனோ கணேசனிடமே அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
ஹட்டனில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கினைப்பாளரும் முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜ் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
மலையக அரசியல் அரங்கத்தின் தலமை ஒருங்கினைப்பாளரும் முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார் 18.03.2023. சனிக்கிழமை ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் அமைச்சர் ஜீவன் தொண்டமானை வழிநடத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
பிரதேச செயலகங்களை முழுமையான பிரதேச செயலகங்கள் அல்லாது குறையான பிரதேச செயலகங்களாக ஜீவன தொண்டமான் திறந்து வைக்கிறார் என்றும் இவர்கள் பாராமுகமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
“நாட்டில் உள்ள எந்த தமிழ் கட்சிகளும் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை. அழைப்பு விடுத்தால் இணைந்து செயற்படுவதில் எந்த விதமான மாற்றுக் கருத்துகளும் இல்லை. அந்த இணைப்பு என்பது எத்தகைய ஒரு பொது வேலைத் திட்டத்தை சார்ந்தது என்பதில் மிக கவனமாக இருக்கின்றோம்” என்றார்.
நாம் தமிழர்களாக இருக்கின்றோம். தமிழ் கட்சிகளை வைத்திருக்கின்றோம் என்பதற்கு இவர்கள் எவரும் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை
பொது வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டு அந்த பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு காணப்படுமாக இருந்தால் அதனை நாங்கள் செய்து காட்டத் தயாராக இருக்கின்றோம்” என்றார்.