விமான டிக்கெட் விலை மேலும் குறையும் !!
அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், எதிர்காலத்தில் விமான டிக்கெட் விலைகளை மேலும் குறைக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.