;
Athirady Tamil News

கசகசாவின் மருத்துவ பலன்கள்!! (மருத்துவம்)

0

வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் கசகசாவை சேர்த்திருப்பதை காணலாம். கசகசாவுக்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது. இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவப் பயன்கள், சோப்புகள், நறுமண திரவியங்கள், மேலும் உணவுகள் மற்றும் பானங்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

இந்த அளவற்ற பயன்களைக் கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தைச் சேர்க்கிறது. கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் இங்கு காணலாம்.

செரிமானத்துக்கு நல்லது: கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கிறது. இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மைஇ நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது.

கருவளத்தை மேம்படுத்துகிறது: கசகசாவின் மருத்துவ குணம் பெண்களின் கருவளத்திற்கு நன்மை பயக்கிறது. கசகசா விதைகளின் எண்ணையயைப் பயன்படுத்தி கருக்குழாய் கழுவப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு பெண்களில் கருவுறும் விகிதம் அதிகரிக்கிறது. இது கருக்குழாயிலுள்ள கருச் சிதைவுகள் அல்லது சளி போன்ற திரவ கசடுகளை நீக்குகிறது. இது சுமார் 40 சதவிகித பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளைக் காட்டியுள்ளது. மேலும்இ கசகசா விதைகள் உங்கள் பாலியல் விருப்பங்களை அதிகரித்து ஆண்மையையும் பாலுணர்ச்சியையும் அதிகரித்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது: கடினமான வேலைகளை செய்வதற்கு ஆற்றல் அளவை அதிகரிக்க நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள் தேவைப்படுகிறது. கசகசா விதைகள் கலப்பு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது உடலில் கரையும் போது ஆற்றலை உற்பத்தி செய்கிறது. மேலும் சோர்வுக்கு வழிவகுக்கும் கால்சியம் குறைபாடு ஏற்படும் போது இது போதுமான கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.