;
Athirady Tamil News

ஹரக் கட்டாவின் மனு குறித்த உத்தரவு !!

0

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் பாதுகாப்பை சட்டத்துக்கு உட்பட்டு உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு குறித்த மட்டுப்படுத்தப்பட்டஆட்சேபனைகளை ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (20) கால அவகாசம் வழங்கியது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட ஹரக் கட்டா, குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.