புடினுக்கு எதிராக ரஷ்யாவில் இராணுவப் புரட்சி..!
ரஷ்யாவில் வெகு விரைவில் புரட்சி ஒன்று ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கின்றது.
குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு எதிராக எழலாம் என்று கூறப்படுகின்ற அந்தப் புரட்சி, ஒரு மக்கள் புரட்சியாகவோ அல்லது ஒரு இராணுவ புரட்சியாகவோ அமையலாம் என்று கூறப்படுகின்றது.
இராணுவ புரட்சி ஏற்படுவதானால் யாரால் அது ஏற்படுத்தப்படும்? என்ன நோக்கத்திற்காக அது ஏற்படுத்தப்படும்? ரஷ்ய அதிபர் அதனை எவ்வாறு எதிர்கொள்வார் போன்ற கேள்விகள் அனைத்தும் ஒரு புறம் இருக்க, ரஷ்யாவில் ஒரு இராணுவ புரட்சி இடம்பெறுவதற்கு சாத்தியம் இருக்கின்றதா என்ற கேள்வியே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கின்ற பலரிடமும் ஏற்படலாம்.
ரஷ்யாவை போன்ற ஒரு நாட்டில் மக்கள் புரட்சியோ? இராணுவ புரட்சியோ இடம்பெறுவதற்கான வரலாறு இருக்கின்றதா? என்ற கேள்விக்கு அப்படி ஒரு வரலாறு ரஷ்யாவில் இருக்கின்றது என்பதுதான் பதில்.
புரட்சி என்பது ரஷ்யர்கள் ரத்தத்தில் ஊறிப்போய் விட்ட ஒன்று. இந்த உண்மையை உள்வாங்கிக் கொண்டுதான் ரஷ்யாவில் புடினுக்கு எதிராக மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகின்ற அந்தப் புரட்சி பற்றி நாம் பார்வையை செலுத்த இருக்கின்றோம்.