ஜி20 மாநாட்டிற்கு ஆலோசனைகளை வழங்குங்கள்: இளைஞர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!!
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர் உச்சிமாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கு இளைஞர்கள் ஆலோசனைகளை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். ‘இந்தியாவின் கலாசாரம், ஆன்மிகம் பழமையானது என்றும், பாரத நாட்டைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என பிரிந்து இருக்கிறது.
இதனால், ஒரு குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். தாங்கள்தான் அடுத்த தலைவர்கள் என்பதை புரிந்து இளைஞர்கள் அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய பரிந்துரைகளை G20 மாநாட்டில் முன்வைக்கவேண்டும். ஜி20 குழுவின் தலைவர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்றவேண்டும்’ என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.