;
Athirady Tamil News

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை – கலாநிதி ஆறுதிருமுருகன்!! (PHOTOS)

0

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச் மாதம் 24ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இலங்கை சிவபூமி அறக்கட்டளையினால் நிறுவப்பட்டுள்ள திருமந்திர அரண்மனை சம்பிரதாயபூர்வமாக திறந்த வைக்கப்படவுள்ளது.

3 ஆயிரம் தமிழ் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப் பெட்டகமான திருமந்திரத்தை கையால் உளிகொண்டு மூன்று ஆண்டுகளாக இளைஞர்கள் கருங்கல்லில் செதுக்கியுள்ளனர்.

இந்தப் பாடல்களை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ள திருமந்திர அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

108 சிவலிங்கமும் நடுவில் கருங்கல்லினால் ஆக்கப்பட்ட கோவிலில் முகலிங்கப்பெருமானும் கிழக்கிலங்கையில் முதல் முதலாக வித்தியாசமான முறையில் காட்சியளிக்கின்றது.

கிழக்கிலங்கையில் தானாகத் தோன்றிய தான்தோன்றிஸ்வரர் போத்துக்கேயர் அந்த இடத்திற்கு வந்தபோது இந்த மாடு கருங்கல் மாடு சாணிபோடுமா என்று கேட்டபோது அந்த மாடு எழுந்து நின்று போட்ட சாணி கருங்கல் சாணியாக இன்றைக்கும் பாதுகாக்கப்படுகின்றது.

போர்த்துக்கேய தளபதிகளே இந்தக் கோவிலை பெருமையாக நினைத்து வழிபட்ட மரபு இன்றும் பேசப்படுகின்றது. அந்த இடத்தில் தோன்றிய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கிழக்கிலே பிரமாண்டமான கோவில் பல லட்சம் மக்கள் ஒன்றுகூடுகின்ற அந்தக் கோவிலில் இப்போது யாழ்ப்பாணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்த அறக்கட்டளை சிவபூமி அறக்கட்டளை பல லட்சம் ரூபா செலவில் அந்தத் திருமந்திர அரண்மனையை அமைத்துள்ளார்கள்.

திருவாசக அரண்மனையை நாவற்குழியில் அமைத்து பேணிப் பாதுகாப்பது போன்று கிழக்கிலங்கையிலே இந்தப் பணி செய்து கிழக்கிலங்கை மக்களிடமே தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் நிர்வாகத்திடனே இந்தப் பணியை ஒப்படைக்கின்றார்கள்.

இங்கே கருங்கற் கோவிலிலே முகலிங்கம் இலங்கையிலே ஒரே ஒரு ஆலயத்திலே இணுவில் காரைக்கால் சிவன் கோவிலிலே முகலிங்கம் இருக்கின்றது. இப்போது கிழக்கிலங்கையில் மூலக்கருவறையிலே முகலிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

108 சிவலிங்கம் கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கின்றது 3 ஆயிரம் திருமந்திரப் பாடல்களும் வாசலிலிலே அசையாத் தேராக சிற்பத்தேர் ஒன்று உருவாக்கப்பட்டு அந்தத் தேரிலே சிவபெருமானும் திருமூலராகிய திருமந்திரத்தைப் படைத்த திருமூலரும் சிற்பமாக எழுந்தருளச் செய்துள்ளார்கள்.

இது மட்டுமல்ல திருமந்திர அரண்மனைச் சுற்றாடல்கள் புனிதம் பெறக்கூடியதாக அங்கே பல்வேறு விடயங்கள் நிலைநாட்டப்பட்டு சம்பிரதாயபூர்வமாக கிழக்கிலங்கை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 24 அம் திகதி இடம்பெறவுள்ளது.

கிழக்கிலங்கை மக்கள் மட்டுமல்ல அனைத்து சைவ மக்களும் வருகை தந்து உலக அதிசயமான 3 ஆயிரம்; பாடல்கள் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ள 1330 திருக்குறள் இந்தியாவில் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது திருவாசகம் யாழ்ப்பாணத்தில் 650 பதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலகத்திலேயே 3 ஆயிரம் தமிழ்ப்பாடல்களை கருங்கல்லில் பதிப்பித்த பெருமை சிவபூமி அறக்கட்டளையைச் சாரும் இதைத் தாங்குகின்ற பெருமை கிழக்கிலங்கை மக்களைச் சாரும் அற்புதமான இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.