சட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி இரத்து!!
சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகள் கிடைத்தன. ஆதரவாக ஒரு வாக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.
இதற்கிணங்க வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து வாபஸ் பெறப்பட்டு இரத்துச் செய்யப்பட்டது.
இதையடுத்து, சட்டக்கல்லூரி பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்தும் நடைபெறும்.