உள்ளூராட்சி தேர்தலில் தலையிடப் போவதில்லை – IMF!!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் செயற்பாடுகளில் தலையிடப் போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பான எந்தவொரு சிபாரிசையும் முன்வைக்கவில்லை என்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை இன்று காலை நடத்தியுள்ளனர்.
இதன்போதே மசாஹிரோ நோசாகி இந்த தகவலை கூறினார்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.