வடமராட்சி கிழக்கில் 10 படகுகள் தீக்கிரை!!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். படகுகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கடலட்டை தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்டு, நீண்ட காலமாகத் தொழிலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தளத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குச் சொந்தமான 10 படகுகளே தீக்கிரயாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.