;
Athirady Tamil News

சர்வதேச நீர்தினம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.!! (PHOTOS)

0

இன்று சர்வதேச நீர்தினம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை சுற்றாடல் கழகமும்,எதிர்கால சுற்றுச்சூழல் கழகமும் இணைந்து நடத்தியிருந்தது.

பாடசாலை பதில் அதிபர் யோ.இளங்கீரன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் வே.குகமூர்த்தி, சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை முன்னாள் அதிபர் திருமதி சிவமலர்.சுந்தரபாரதி மற்றும் ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம், எதிர்கால சுற்றுச்சூழல் கழகத்தைச் சேர்ந்த ம.சசிகரன், எஸ்.கேதீஸ்வரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நீர்தினம் தொடர்பான சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.