;
Athirady Tamil News

தாய்லாந்து துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு- குற்றவாளியை சுற்றி வளைத்த போலீஸ்!!

0

தாய்லாந்தின் பெட்சாபுரி நகரில் இன்று வாலிபர் ஒருவர் திடீரென தனது வீட்டின் அருகே சென்றவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளான். இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, துப்பாக்கி சூடு நடத்தியவரின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வாலிபர் வீட்டுக்குள் பதுங்கியிருந்தபடி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் இருந்த குழந்தைகளை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். அந்த வாலிபரை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் அவன் பெயர் அனுவத் வீன்டாங் (வயது 29) என்பது தெரியவந்துள்ளது. திடீரென வன்முறையில் ஈடுபட்டதற்கான காரணம் தெரியவில்லை. போதைப்பொருள் வழக்கின் விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.