சர்வதேச நாணயநிதியம் முதன்முறையாக யுத்தம் புரியும் நாடொன்றிற்கு கடனுதவி!
சர்வதேச நாணயநிதியமானது முதன்முறையாக யுத்த நாடொன்றிற்கு கடனுதவி வழங்க முன்வந்திருக்கின்றது.
அந்தவகையில், சர்வதேச நாணயநிதியமானது உக்ரைனுக்கு 15 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடன்தொகையை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
யுத்தம் புரியும் நாடொன்றிற்கு சர்வதேச நாணயநிதியம் கடனுதவி வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச நாணயநிதியமும், உக்ரேனிய அரசாங்கமும் அடுத்த நான்கு வருடங்களில் இந்த விரிவான கடன் திட்டத்தைச் செயல்படுத்த முதற்கட்ட ஒப்புதலை எட்டியிருக்கின்றன.
உக்ரைனின் அனைத்துலக நன்கொடையாளர்களும், பங்காளிகளும் விசேடமாக சலுகை முறையில் நிதி வழங்க இது உதவும் என நாணயநிதியம் கூறியுள்ளது.
வெகுவிரைவில், குறித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.