;
Athirady Tamil News

மகளின் திருமணத்தில் நடனம் ஆடிய கமல் பட நடிகை!!

0

மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். தமிழில் கமல் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதுபோல ‘தூங்கா வனம்’ உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.

விருந்தினர்களை வரவேற்கும் விதத்தில் நடந்த இந்த நடனத்தை திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர். இதற்கிடையே திருமண விழாவின் வீடியோவை சமீபத்தில் நடிகை ஆஷா சரத் வெளியிட்டார். அதில் நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர். மகளின் திருமணத்தில் தாய் நடனம் ஆடியதற்கு பாராட்டும் குவிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.