நல்லிணக்க குழுவின் தலைவராக டிலான் பெரேரா !!
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தில், டிலான் பெரேராவின் பெயரைபாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிய,பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க வழிமொழிந்தார்.
குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், குலசிங்கம் திலீபன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, மயாதுன்ன சிந்தக அமல், கெவிந்து குமாரதுங்க, ரஜிகா விக்ரமசிங்க, இசுரு தொடங்கொட ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.