சமையல் எரிவாயு விலை குறைகிறது!!
அடுத்தமாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம் செய்யவில்லை.
இம்முறை டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப சமையல் எரிவாயுவின் விலையையும் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் லிட்ரோ நிறுவனம் இருப்பதாகவும், இதுகுறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாதாந்தம் ஐந்தாம் திகதிகளில் சமையல் எரிவாயுவுக்கான விலை சூத்திரம் அமுலாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.