மீன் சந்தையில் இறால் திருட்டு; ஒருவர் கைது!!
பேலியகொட மீன் சந்தையில் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான இறாலும் கணவாயும் திருடப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கடந்த 21 ஆம் திகதி இரவு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 11 இறால் பெட்டிகளையும் 18 கணவாய்ப் பெட்டிகளையும் சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பேலியகொட பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய இறால் மற்றும் கணவாய் பெட்டிகயை இன்னொரு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் போது குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி அம்பகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்றும் அவர் பேலியகொட மீன் சந்தை வளாகத்தில் தொழில் செய்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.