ஜப்பான் கடற்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் – அமெரிக்கா களமிறக்கும் மேலதிக இராணுவம்! !!
ரஷ்யா இராணுவ தற்காப்புப் பயிற்சிகளை ஜப்பானுக்கு அருகே மேற்கொண்டதால் குறித்த பிராந்தியத்தில் பதற்றநிலை நிலவுவதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா (Fumio Kishida) உக்ரைன் சென்றிருந்ததுடன், அந்தசமயம் ஜப்பானின் கடல் பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
ரஷ்யா தனது பலத்தை காட்டுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜப்பானுக்கு வடக்கே உள்ள குரில் தீவுகளில் கடலோர தற்காப்பு ஏவுகணை அமைப்புக்களை நிறுவியுள்ளதாக ரஷ்யா தெரிவித்திருக்கின்றது.
இது மேலும் அந்த பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அதேசமயம், அமெரிக்காவும் மேலதிக இராணுவத்தை குறித்த வட்டாரத்தில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.