பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள் !!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கலிஃபோர்னியாவில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என எங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.