சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!!
சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று புதன்கிழமைவான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் அலேப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேலினால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
‘அதிகாலை 3.55 மணியளவில் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தை இலக்குவைத்து இஸ்ரேலிய எதிரிகள் வான் வழித் தாக்குதல் நடத்தினர்’ என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொழில்நுட்பவியலாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர் என சிரியாவின் போக்குவரத்து அமைச்சு அதிகரிர சுலைமான் கலீல் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய வளாகத்தில் உள்ள, ஈரானிய ஆதரவுப் படையினரின் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இக்களஞ்சியம் முற்றாக அழிந்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 7 ஆம் திகதியும் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மூவர் உயிரிழந்ததுடன், விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.