60 கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 60 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான மசாலாப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 60 இலட்சம் சிகரட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 19,510 கிலோகிராம் காய்ந்த மஞ்சள், 4,500 கிலோகிராம் மஞ்சள் கிழங்கு மற்றும் 4,900 கிலோகிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை கைப்பற்றியதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.