போர் கப்பல் விரட்டியடிப்பு சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு.!!
அமெரிக்க போர் கப்பலை விரட்டி அடித்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அர்லீக் பர்க் வகை தாக்குதல் கப்பலான யுஎஸ்எஸ் மிலியஸ் கடந்த சில தினங்களுக்கு முன், தென் சீன கடலில் ரோந்து வந்தது. அதனை சீன கடற்படை சட்டத்தின்படி விரட்டி அடித்ததாகவும் இதனால் தென் சீன கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை குலைப்பதாகவும் சீனா குற்றம் சாட்டி இருந்தது.
இந்நிலையில், அமெரிக்க கடற்படையின் 7வது படைப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ’யுஎஸ்எஸ் மிலியஸ் தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்து பணியில் இருந்தது. அதனை, பாரசெல் தீவுகளில் இருந்து விரட்டி அடித்ததாக சீனா கூறுவது பொய்’ என்று கூறியுள்ளது.