போசாக்கின்மை தொடர்பில் ஆராய தெரிவுக்குழு!!
இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:
1. நளின் பெர்னாண்டோ
2. சீதா ஆரம்பேபொல
3. அரவிந்த் குமார்
4. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
5. கீதா குமாரசிங்க
6. கயாஷன் நவானந்தா
7. எஸ். ஸ்ரீதரன்
8. காவிந்த ஜயவர்தன
9. ரோகினி குமாரி விஜேரத்னா
10. உபுல் கலப்பத்தி
11. கின்ஸ் நெல்சன்
12. முதிதா பிரிஷாந்தி
13. அலி சப்ரி ரஹீம்
14. குமாரசிறி ரத்நாயக்க
15. ராஜிகா விக்கிரமசிங்க
16. வீரசுமண வீரசிங்க
17. மஞ்சுள திஸாநாயக்க
18. பேராசிரியர் சரித ஹேரத்
19. கலாநிதி ஹரினி அமரசூரிய
20. ஜகத் சமரவிக்ரம
பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அவசியமான தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நியமிக்கப்படும் தற்காலிக குழுக்களாகும். ஒவ்வொரு குழுவும் அத்தகைய குறிப்பிடப்பட்ட ஒரு விஷயத்தை விசாரித்து சபைக்கு அறிக்கை செய்வதற்காக பாராளுமன்ற தீர்மானத்தால் நியமிக்கப்படுகிறது.