எகிறியது டொலர்: தளம்புகிறது ரூபாய் !!
ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய (23) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) சிறிதளவு அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை (23) நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 26 சதமாகவும் விற்பனை விலை 328 ரூபாய் 60 சதமாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.