திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம் !!
2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாததால் காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்தி முடித்தாக தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பெரும்பாலான பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (28) தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.