ஆளுநர் வழங்கிய பணிப்புக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!!
யாழ் மாநகர சபையினை நாவலர் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு ஆளுநர் வழங்கிய பணிப்பு தொடர்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
குறித்த உத்தரவினை மீளப் பெறுமாறு கோரியும் எதிர்வரும் மார்ச் 27 ம் திகதி திங்கட்கிழமை ஆளுநருக்கு மகஜர் வழங்கப்படும் எனவும் அதற்குரிய சாதகமான பதிலினைத் தரமறுக்கும் பட்சத்தில் குறித்த உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணித்துள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.