ரஷ்ய படையெடுப்பு – உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்தமை உண்மை ; மனித உரிமை மன்றம்!
உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பால் உக்ரைனிய பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை மன்றம் உறுதிசெய்துள்ளது.
அதேசமயம், ரஷ்யத் துருப்பினரின் சட்டவிரோதமான மரண தண்டனை, தனிப்பட்ட தாக்குதல்கள் என்பவற்றால் மட்டும் 21 பேர் கொல்லப்பட்டதாக அந்த மன்றம் கூறியுள்ளது.
இந்த யுத்த நடவடிக்கையால் பிள்ளைகள், பெண்கள், ஆண்கள் எனப் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இவ்வாண்டு ஜனவரி இறுதிவரை, குறைந்தது சுமார் 6 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தமையை புலனாய்வு தகவலும் கூறுவதாக சொல்லப்படுகின்றது.
புலனாய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் மட்டும் கிடைத்த எண்ணிக்கை இது எனவும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் கண்மூடித்தனமான சில தாக்குதல்களே குறித்த உயிரிழப்புகளுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்தான் 4 மடங்கிற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.