தென்சீனக் கடலில் விரட்டியடிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல் – அதிகரிக்கும் பதற்றம்!
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்கள் தென் சீனக் கடற்பகுதியில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த கடற்பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான கடற்துறைக் கப்பல் ஒன்றை சீனா விரட்டியடித்ததாக சொல்லப்படுகின்றது.
பாரசெல் (Paracel) எனப்படும் தீவுகளுக்கு அருகே, சீனாவின் எல்லைக்குள் அமெரிக்காவின் (USS Milius) போர்க்கப்பல் உள்நுழைந்ததாக சீனாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் கடற்பகுதியில் நடக்கும் இப்படியான அத்துமீறல்களால் கடுமையான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என பெய்ச்சிங் எச்சரித்துள்ளது.
இருப்பினும் கடற்துறை செயல்முறைகளை நடத்தும் உரிமை தங்களிடம் உள்ளதாக அமெரிக்க கடற்படை பதில் வழங்கியுள்ளது.
சர்வதேச சட்டங்கள் அனுமதிக்கும் எந்தப் பகுதியிலும் செயல்பட முடியும் என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.