முதல் வாரத்திலேயே விற்றுத்தீர்ந்த ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் சாதனமாக அறிமுகமானது. எனினும், விற்பனை துவங்கிய சில நாட்களில் இதன் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்துள்ளன. மார்ச் 17 ஆம் தேதி விற்பனைக்கு வந்த ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் முதல் வாரத்திலேயே விற்றுத்தீர்ந்ததாக ப்ளிப்கார்ட் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 ஃப்ளிப் மாடலின் விலையை ரூ. 89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்திருந்தது. ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் முற்றிலும் புதிய ஃபிலெக்சியன் ஹிஞ்ச் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் அதிகளவு கிரீஸ் இடம்பெறுவதை தவிர்க்க செய்கிறது. இத்துடன் இந்த மாடலில் 3.26 இன்ச் அளவில் பெரிய இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது மற்ற கிளாம்ஷெல் ரக மாடல்களில் இருப்பதை விட பெரியது ஆகும்.
ஒப்போ ஃபைண்ட் N2 ஃப்ளிப் அம்சங்கள்: 6.8 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 3.26 இன்ச் கவர் AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி 50MP பிரைமரி கேமரா 8MP அல்ட்ரா வைடு கேமரா 32MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 4ஜி, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி போர்ட் 4300 எம்ஏஹெச் பேட்டரி 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி