தானேவில் ரூ.9.30 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து அடங்கிய இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்- 4 பேர் கைது!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 9.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கோடீன் அடங்கிய இருமல் சிரப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்து செய்துள்ளனர். மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவில் உள்ள கொண்டாரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். போலீஸ் கமிஷனர் (பிவாண்டி) கிஷோர் கைர்னார் கூறிகையில்” கிடைத்த துப்புத் தகவலின் பேரில், கொங்கன் காவல் நிலையக் குழு ஒரு இடத்தில் சோதனை நடத்தியது.
இதில், லாரியில் இருந்து டெம்போவில் இருமல் சிரப் மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர். அப்போது போலீஸார் ரூ. 9.30 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கைப்பற்றி நான்கு பேரைக் கைது செய்தனர். இதைத்தவிர, 8.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு வாகனங்கள், ஒரு டிரக் மற்றும் ஒரு டெம்போ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.