தெற்கு இங்கிலாந்தின் பூல் துறைமுகத்தில் 200 பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிவு!!
தெற்கு இங்கிலாந்தின் பூல் துறைமுகத்தில் 200 பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் எண்ணெய் மிதந்து காணப்படுகிறது. இதுகுறித்து ஆங்கிலோ- பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெபரென்கோவின் இங்கிலாந்து பிரிவு, “தெற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள் வைட்ச் பண்ணையில் அதன் கிணறு தளங்களில் ஒன்றில் வரையறுக்கப்பட்ட எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக” கூறியது. எண்ணெய் கசிவு என்பது மிக ஆபத்தான விஷயம்.
அதனால், துறைமுகத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முழு விசாரணை தொடங்கப்படும் என்று பொது மேலாளர் பிராங்க் டி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், கசிவு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை தொடங்கப்படும் என்றும் கூறினார். பெரென்கோ ஒரு நாளைக்கு சுமார் 40,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இதில் சுமார் 14,000 பீப்பாய்கள் வைட்ச் பண்ணையில் இருந்து வருகிறது.