தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் இளவரசர் ஹாரி ஆஜர்!!
இங்கிலாந்தில் அசோசியேட்டட் நாளிதழ் நிறுவனத்தின் ‘டெய்லி மெயில்’ நாளிதழ் தனது தொலைபேசியை ஒட்டு கேட்கும் தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக இளவரசர் ஹாரி அந்நாளிதழின் மீது கடந்த அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் டெய்லி மெயில் நாளிதழ் இதனை மறுத்து வந்தது.
இது தொடர்பாக ஹாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல ஆவணங்களை சமர்பித்திருந்தார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹாரி இந்த வழக்கில் சாட்சி அளிக்க நேற்று லண்டன் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.