;
Athirady Tamil News

போதை பொருள் பயன்படுத்துவோருக்கு இங்கிலாந்தில் உடனடி தண்டனை வழங்கும் புதிய திட்டம் அமல்!!

0

இங்கிலாந்தில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் உடனடி தண்டனை வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார். இங்கிலாந்தில் போதை பொருள் பயன்படுத்துவோரால் பொதுமக்களுக்கு அதிகளவில் இடையூறு ஏற்படுவதாகவும் இதனால் அண்டை வீட்டார் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியிருந்தார்.இந்நிலையில், போதை பொருள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் கும்பல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை வழங்கும் புதிய செயல் திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்.

அதன்படி, போதை பொருள் பயன்படுத்தியவர் மீது குற்றம் சாட்டபட்ட 48 மணி நேரத்துக்குள் அவருக்கு உடனடி தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுதல், பொதுசுவரில் எழுதியுள்ளதை அழித்தல், போலீஸ் வாகனங்களை கழுவுதல் உள்ளிட்ட தண்டனைகள் இதன் கீழ் வழங்கப்பட உள்ளது. இது குறித்து பேசிய பிரதமர் சுனக், ‘’போதை பொருள் பயன்படுத்துவோரால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகி விட்டனர். அதனால் தான், தவறு செய்தவர்களுக்கு அவர்களது கண் முன்பே உடனடியாக தண்டனை வழங்கும் இந்த புதிய செயல்திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது,’’ என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.