பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டிய நபர்!!
ஹொரணை பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் பிரவேசித்த நபர் ஒருவர் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சிகரெட்டுகள் மற்றும் பால்மா பாக்கெட்டுகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கடையின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக அங்கிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேக நபர் கடைக்குள் நுழைந்து பொருட்களை திருடுவது அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.