PUCSL தலைவரின் அறிவிப்பு!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தாம் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சிற்கு பதில் கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்த அவர், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், பெப்ரவரி 16 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
13 நாட்களுக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தின் அனைத்து கோப்புகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.