ரஷிய தேசிய பூங்காவில் சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை!!
வனவிலங்குகள் காட்டுக்குள் சுற்றிவருவதையும், எதிரிகளை வேட்டையாடுவதையும் வனவிலங்கு ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். மின்னல் வேகத்தில் ஓடும் மான், வேட்டையை துரத்தி செல்லும் சிங்கம், புலி, சிறுத்தை, இவற்றிடம் இருந்து தப்பிக்க முயலும் சிறு விலங்குகள் போன்றவற்றை வீடியோவாக பார்க்கும் பலரும் வனவிலங்குகளை கண்டு மிரண்டுபோவார்கள். அந்த வகையில் இந்திய வனத்துறை அதிகாரி சாகேத் படேலா என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ, சிறுத்தைகள் பற்றிய சிந்தனையை மாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று அதிகாலை பொழுதில் எழுந்து காட்டுக்குள் நடைபோடுகிறது. பின்னர் சூரியனை பார்த்தபடி கால்களை நீட்டுகிறது.
பின்னர் சூரியநமஸ்காரம் செய்வது போல செயல்படுகிறது. சிறுத்தையின் இந்த செயல்பாடுகள் வனவிலங்கு ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வீடியோ ரஷிய தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சூரிய நமஸ்காரம் செய்வதில் சிறுத்தைக்கும் இத்தனை ஆர்வமா? என கேள்வி கேட்ட இணையதளவாசிகள், அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். யோகா ஆசிரியர் இல்லாமல் இந்த சிறுத்தைக்கு யோக கற்று கொடுத்தது யார்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.