யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் 11 பெண்கள் கௌரவிப்பு!!
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் மகளிருக்கான தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக சமத்துவத்தை உறுதி செய்வதுடன் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வடமாகாணத்தில் சாதித்த 11 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் இ.சுரேந்திரகுமார், சட்டத்தரணி மாதுரி நிரோசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.