நாட்டிற்கு தனிப்பட்ட முறையில் டாலர்களை கொண்டு வருபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்!!
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அவர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக தனியார் மட்டத்தில் இலங்கைக்கு டொலர்களை கொண்டு வரும் ஏனைய நபர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்டிருந்ததுடன், ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.